×

பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபனின் தந்தை பழனிவேலன் உருவ படத்திறப்பு நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, நவ. 26: பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், என்.பி.சிற்றரசு ஆகியோரின் தந்தையான திமுக முதுபெறும் முன்னோடியுமான பழனிவேலன் திருஉருவ படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்பியுமான எல்.கணேசன், தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், மாநில திமுக விவசாய அணி அமைப்பாளர் விஜயன், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம், மதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்று பழனிவேலன் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.

திருவெண்காடு வள்ளலார் மன்ற தலைவரும், சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனருமான டாக்டர் ஜெயராஜமூர்த்தி அமரர் தீபம் ஏற்றினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஒரத்தநாடு ராமச்சந்திரன், தஞ்சாவூர் நீலமேகம் மற்றும் இன்னாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்று பழனிவேலன் உருவ படத்துக்கு புகழஞ்சலி செலுத்தினர்.


Tags : DM Palanipalan ,Pattini Kotte Eastern ,
× RELATED சத்யா விளையாட்டு அரங்கத்தில் 1000 மரக்கன்றுகள்